வெள்ளி, மே 27

மொழியின்றி விரிகின்ற என் ஜீவன்...


கனடிய தமிழரின் முழுநீளத்திரைப்படத்தில் இடம்பெற்ற 3 பாடல்கள் செல்லத்துரை சுதர்சனின் வரிகளில் பதிவாகியுள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்

படம் - 1999
பாடல்வரிகள் - செல்லத்துரை சுதர்சன்
பாடியவர் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை - ராஜ்

சனி, மே 21

த.தவேந்திரராசா

அண்மையில் கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற த.தவேந்திரராசா அவர்களைப் பற்றிய பதிவு ஒன்று. அவரது ஓய்வுக்காலம் நலமாக அமைய வாழ்த்துக்களோடு.

பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களுடன் தவேந்திரராசா


---

நன்றி - கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் இருந்து

த.தவேந்திரராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்பன் தவேந்திரராசா (1951) மயிலிட்டி அல்வாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் சிவகுரு வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், வடமராட்சிக் மருதங்கேணிக் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றினார்.

தனது ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக்கல்வியையும் யாழ் தேவரையாளி இந்துக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார். க.பொ. உயர்தரத்தை யாழ் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றார்.

பொருளடக்கம்


பட்டப்படிப்புநிலை

கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகமாணிப் பட்டத்தையும் தொடர்ந்து அதே பல்கலைக்ககழத்தில் தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கல்வி டிப்ளோமாப் பட்டத்தையும், முதுகலைமாணிப் பட்டத்தையும் (பண்பாட்டியல்) பெற்றுக் கொண்டார்.


ஆசிரியப்பணி

கண்டி கம்பளை சாஹிராக் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு தன்னை ஆசிரியராக இணைத்துக் கொண்டார். 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற இடமாற்றத்தின்போது யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பித்தார்.


அதிபர் சேவை

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் தேறியதன் காரணமாக அதிபர் நியமனம் வழங்கப்பட்டது. அதன்போது யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தர வகுப்புக்கான பகுதித் தலைவராக கடமையாற்றினார். 1993 ஆண்டு அதிபர்களுக்கான இடமாற்றத்தின் போது யாழ் வல்வை சிவகுரு வித்தியாலயத்தில் அதிபராக நியமனம் பெற்று 14 வருடங்கள் கடமையாற்றினார்.


கோட்டக்கல்விப் பணிப்பாளர்

2006 ஆம் ஆண்டு வடமராட்சி மருதங்கேணிக் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அக்காலத்தில் மருதங்கேணிப் பிரதேசம் பிரிக்கப்பட்ட நிலையில் வடமராட்சிக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் முறைசாராக் கல்விப் பிரவுக்கு கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து 2009 இல் கரவெட்டிக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி 15.03.2011 இல் ஓய்வு பெற்றார்.


ஆய்வேடுகள்(பதிப்பிக்கப்படாதவை)

  • மரபுரீதியற்ற ஏற்றுமதிப் பொருட்களின் போக்கு – தத்துவமாணிப் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆய்வேடு
  • அடிப்படைக் கணக்கியல் கற்பித்தல் முறைமைகள் – கல்வி டிப்ளோமாவுக்கான ஆய்வேடு
  • வல்வைப் பண்பாட்டு உருவாக்கத்தில் பொருளாதாரத் தாக்கம் – முதுகலைமாணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு

செவ்வாய், மே 17

ஷோபாசக்தியின் 'ரூபம்'சிறுகதை




அண்மையில் 'ஷோபாசக்தி'யின் 'ரூபம்' என்றொரு சிறுகதை படித்தேன். அதை அவரது தளத்தில் வாசிக்கலாம்.

ஏற்கனவே கேள்விப்பட்ட கதைகள்தான். அது ஷோபாசக்தியிடம் நல்லதொரு புனைவாகியுள்ளது. காலம், நிகழ்வு, வலி... எல்லாம் சேர்ந்திருக்கிறது. இன்னும் எவ்வளவே கதைகள் இருக்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவை புனைவாகும்போது விமர்சனங்களுக்கு அப்பால் எங்கள் மக்களின் துயர்செறிந்த வாழ்வின் வரலாறாகத்தான் இருக்கும்.

வெள்ளி, மே 6

எழுத்தாளர் தெணியானின் உரையாடல்




மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களின் நேர்காணல் ஒன்று ஜீவமுரளி அவர்களின் வலையில் இருந்து பார்க்கக் கிடைத்தது. தலித்தியஇலக்கியம் குறித்த ஆளுமைகளில் ஈழத்தில் முக்கியமானவர் தெணியான். அவருடன் 2003 இல் நிகழ்த்திய உரையாடல் என்றொரு குறிப்பும் ஜீவமுரளியால் கொடுக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவு நண்பர்களுக்காக அதனை எனது வலைப்பதிவில் தருகிறேன்.