வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
பண்பாட்டுப் பேரவையின் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் மிக எளிமையாக 17.07.2022
அன்று வதிரி பரமானந்தா ஆச்சிரம வளாகத்தில் இடம்பெற்றது. போக்குவரத்துப் பிரச்சினை பொருளாதார
நெருக்கடிகளுக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் வடமராட்சி தெற்கு மேற்கு
கலாசார உத்தியோகத்தரின் நெறிப்படுத்தலில் வடமாகாண
பண்பாட்டுத் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரமானந்தா சிறீமுருகன்
இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களும் கரவெட்டி கிழக்கு லம்போதரன் அறநெறிப் பாடசாலை மாணவர்களும்
பங்குபற்றினர்.
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஆடிப்பிறப்புப் பாடலுடன் ஆரம்பித்த மேற்படி நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் போட்டியில் பங்கெடுத்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பண்பாட்டுப் பேரவையினர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், பரமானாந்தா ஆச்சிர நிர்வாகத்தினர் இணைந்து கொண்டனர்.
படங்களும் பதிவும் : சு. குணேஸ்வரன்