"இறந்து விடுவேன் என்று
நிச்சயமாய்த் தெரிந்தது
வாழவேண்டும் என்று துரத்துகின்ற ஆசையை
பிடுங்கி எறிய முடியாமல்
மனம் அழுகின்ற கடலுக்குள் புதைகிறது" - செழியன்
ஈழப்போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான படைப்புக்களைத் தந்தவர் கவிஞர் செழியன். போரையும் வாழ்வையும், சாவின் விளிம்புவரை சென்று மீண்ட வரலாற்றையும் எழுதியவர். அவர் எழுதிய " ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து" என்ற ஈழப்போராட்ட வரலாற்றின் ஒரு பக்கத்தைக் கூறும் படைப்பு மிக முக்கியமானது.
அதேபோல போரினதும் வாழ்வினதும் பக்கங்களைத் தனது கட்டிறுக்கமான கவிதைகளில் தந்தவர். அனுபவத்தின் வலிகளும், உணர்வின் ஆழமும் மொழியின் வசீகரமும் அவரின் கவிதைகளில் முக்கியமானவை. 80 களில் இருந்தான ஈழக்கவிதை வரலாற்றில் முக்கியமான பங்களிப்பைச் செய்தவர். நண்பர்களோடு இணைந்து இலக்கியச் செயற்பாட்டில் தீவிரமாக பங்கேற்றவர்.
அன்னாரின் இழப்பு மிகுந்த துயரத்தைத் தருகிறது. ஆழ்ந்த இரங்கல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக