மார்ச் மாத காற்றுவெளி மின்னிதழ் வெளிவந்துள்ளது. இதில் ஹஸானி/இரா.இரவி/இசைப்பிரியா/எஸ்.நளீம்/ ரிஷான் செரீப்/ வேலணையூர் பொன்னண்ணா/ துவாரகன்/ ஈழப்பிரியா/ இவள்பாரதி ஆகியோரின் கவிதைகளும்;
நுணாவிலூர் விசயரத்தினம்/ வி.கந்தவனம் ஆகியோரின் கட்டுரைகளும்;
அகில்/ சித்தார்த்த 'சே'குவேரா/ ராம்ப்ரசாத் சென்னை/ செல்லம்மா வித்யாசாகர்/ராகினி/ஆகியோரின் சிறுகதைகளும்;
'ஆடுகளம்' பற்றிய வித்யாசாகரின் விமர்சனமும் உள்ளடங்கியுள்ளன.
லண்டனிலிருந்து முல்லை அமுதனின் முயற்சியால் மின்னிதழாக தொடர்ந்து வெளிவருகின்றது.
இவ்விதழின் அட்டைப்படத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைக்துறை மாணவி எஸ். ஜனனியின் அழகான ஓவியம் அலங்கரிக்கிறது. ஒன்லைனில் இதழை இலவசமாக வாசிக்க முடியும் வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.
திரு.துவாரகன்.
பதிலளிநீக்குவணக்கம்.
தூரமாக இருந்தாலும் உறவின் பலம் அதிகம் தான்.
காற்றுவெளியின் வருகையின் பின்பும், கண்காட்சியின் போதும் சிலரால் மனம் வருந்துவதுண்டு. உழைக்கும் பணத்தில் நூல்களை வாங்குவதும்,அந் நூல்களை ஆவணப்படுத்துவதும் தொடர்கின்ற வேளையில் எங்கோ ஒரு மூலையில் காந்தளகம்,துவாரகன் போன்றோரின் ஒத்துழைப்பு மனதை சாந்தப்படுத்துகிறது.
நன்றி என்ற வார்த்தை அவர்களுக்கு போதாது.
நட்புடன்,
முல்லைஅமுதன்
என்னால் முடிந்தவரை எனது பங்களிப்பைச் செய்துவருகிறேன். நன்றி முல்லைஅமுதன்.
பதிலளிநீக்கு