ஞாயிறு, பிப்ரவரி 6

இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ சிறுகதைத் தொகுதி


புதிய வரவு


இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’ சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் புது எழுத்து சிற்றிதழ் தனது பத்தாமாண்டு கொண்டாட்ட வெளியீடாக இத்தொகுப்பை (நவம்பர் 2010) வெளியிட்டுள்ளது.

ஈழத்தில் நவீன எழுத்துமுறையில் புனைவெழுதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மிகச் சில படைப்பாளிகளில் ஒருவர் இராகவன். அந்த எழுத்துக்களுக்காக பலத்த விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருபவர்.

இந்தவகையில் இத்தொகுப்பில் வெளிவந்துள்ள கதைகள் யாவும் வடிவச் சிதைப்பையும், மரபு முறையான கதைசொல்லலையும் மறுதலிப்பனவாக உள்ளன.

இத்தொகுப்பில் வாமன அவதாரம், கலாவல்லியின் நெடுக்குவெட்டு முகம், அணங்கு, கதை எழுதுவோருக்கு ஒரு நற்செய்தி, அகலிகையின் தாகநதி, சதுரம், மநுபுத்திரனின் படைப்புகள், எதிர்நோக்கு, புத்தக அறிமுகம், வண்ணத்துப்பூச்சிகள் கொண்டு செல்லும் இதிகாச நகரம் ஆகிய பத்துக் கதைகள் உள்ளன.

2 கருத்துகள்:

  1. ஈழத்து இடப்பெயர்வு,போர் அவலம், சமூகப்பிறழ்வு,மனித முரண்பாடு இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியதாக எழுதப்படும் எமது சிறுகதைகள் பலராலும் பேச வைத்திருக்கிறது.சொல்லாடல்களூடு கதையை நகர்த்திச் செல்லும் பாங்குடையதாய் நமது கதைகள் பலரையும் வசீகரிதிருப்பதால்தான் இலங்கையைத் தாண்டி பிரசுரங்களைக் காண்கிறது. இது நமக்கு கிடைத்த வெற்றியுமாகும்.ஒரு வழியாக இருந்த நமது இலக்கியம் அடைப்புக்குறிகளின்றி வாசிக்க வைத்திருக்கிறது.அப்படியான சூழலில் இராகவனின் கதைத் தொகுதி கிடைத்திருப்பது வரவேற்கத் தக்கது.கைலாசபதி,டொமினிக் ஜீவா,காவலூர்.ஜெகநாதன்,பத்மநாப ஐயர் போன்ற பலருக்கு சமர்ப்பணமாக்க வேண்டியுள்ளது.ஏனெனில் அவர்கள் தான் அந்த நாட்களில் நமது இலக்கியத்தை தமிழகத்தில் பிரசுரிக்க முயன்றவர்கள்.
    புதியவர்கல் மறத்தல் ஆகாது.
    குணேஸ்வரனுக்கும் நன்றிகள்.
    முல்லைஅமுதன்
    (காற்றுவெளி)

    பதிலளிநீக்கு