ஞாயிறு, டிசம்பர் 11

யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள்

நன்றி - யோ. கர்ணன்
http://yokarnan.com/?p=39


            
சகறணம்துயில்ஆடுஜீவிதம் என நல்ல நாவல்கள் பல அண்மை காலத்தில் வெளிவந்திருக்கின்றன என நான்கேள்விப் பட்டிருக்கிறேன்.இஸ்ரேலியர்களினால் பெருந்தொகை பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டதைலிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டதை மற்றும் உலகில் நடக்கும் பல புதினங்களைசெய்தியின் வாயிலாக அறிந்து கொண்டிருப்பதை போல இதனையும் இணையத்தளத்தின் வழி அறிந்து மட்டும் கொண்டேன். சில இடங்களில் அட்டைபடத்தையும்பார்க்க முடிந்தது. நேரில் காண முடியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாண வாசி.
சென்றவாரம்வரை யாழ் புத்தக கடைகளில் சல்லடை போட்டும் இதிலொருநாவலும் கிடைக்கவில்லை. அடுக்கிக்  கிடக்கும் ரமணி சந்திரனின்நாவல்களிற்கிடையிலாவது மறைந்திருக்கிறதா என தேடியும் பலனிருக்கவில்லை.
இந்த நாவல்கள் வெகு காலம் கழித்து மிகச்சிலவாக இங்கு வரக்கூடும். அப்பொழுது சிலவேளைகளில் அவை இணையத்தில் வாசிக்கக் கூட கிடைக்கலாம்.
இப்படித்தானிருக்கிறது யாழ்ப்பாண நிலை. காலச்சுவடுமற்றும் உயிர்மை என்ற நட்சத்திர‘ சஞ்சிகைகள் தவிர வேறெதுவும் ஒழுங்கு முறைப்படி வருவதில்லை. புதுவிசை. புத்தகம்பேசுதுமற்றும் சில எப்பொழுதாவது வருகின்றன.
எல்லா கடைகளிலும் ஜனனிபிரியாமித்திரன் வகையறாக்கள் முன்னுக்குத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இது போல இன்னொரு நிலையுமுண்டு. ஈழநூல்களிற்கானசந்தை வாய்ப்பு. ஈழ படைப்பாளிகளின் நூல்கள் சந்தைப்படுத்தப்படுவதில் பெரியசிரமங்களை எதிர் கொள்கின்றன. அனேகமான எல்லா ஈழப்படைப்பாளிகளும் அனேகசந்தர்ப்பங்களில் இந்த நிலை பற்றி சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்-சந்தைபடுத்துவதில் தாம் எதிர் கொள்ளும் சிரமங்கள் பற்றி. அதில் நிறைய உண்மையுமுண்டு. அண்மையில்வடலி பதிப்பாளர் அகிலனிற்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச்சொன்னார். அவர்இந்தியாவிலிருந்து இலங்கை வரும் போது தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபுத்தகங்களின் சில பிரதிகளைக்கொண்டு வந்திருந்தார். அதனைப்பூபாலசிங்கம் புத்தகசாலைக்குக்கொடுக்கச் சென்றபோது அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆனாலும் சில காலத்தின் பின் அந்தப் புத்தகங்கள் அந்தக்  கடையில் இருந்தன. அவர்கள் இந்தியாவில்தான்கொள்வனவு செய்வது என்ற ஒரு முடிவுடன்தானிருக்கிறார்களே தவிரநூல்களைப் பார்த்து வாங்குவதென்ற நிலையிலில்லை.
இந்த இரண்டு சம்பவங்களிற்கும் காரணம் மிகத்தெளிவானது. இந்திய கலாசார மற்றும் பண்பாட்டுத் தாக்கம். இதே விதமான நெருக்கடியை தாம் மலேசியாவில் எதிர் கொள்வதாக ண்மையில் இலங்கை வந்திருந்த நவீனும் சொல்லியிருந்தார்.
இந்திய பண்பாட்டின் தாக்கம் நாம் முயன்றாலும்விடுபட முடியாத அளவிற் தானிருக்கிறது. இது நமக்கு மட்டுமே உ ரிய பிரச்சனையல்ல.உபகண்டத்திலிருக்கும் மற்ற எல்லா சிறிய இனங்களும் இந்தக் கலைகலாசார, பண்பாட்டு நெருக்கடியை எதிர் கொள்கின்றன. இது கூட ஒருவிதமானஆக்கிரமிப்புதானென நண்பர் ஒருவர் சொன்னார். அவர் இதற்குப் பாவித்த பெயர் பண்பாட்டு ஆக்கிரமிப்பு‘. மலேசியாவில் தாமும்இதே விதமான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அண்மையில் இலங்கை வந்திருந்த வல்லினம்ஆசிரியர் நவீனும் குறிப்பிட்டிருந்தார்.
நமது விருப்பம்ரசனைநாகரிகம்அனைத்தும் இந்தியாவில்தான் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின்வானொலிகளைத் தவிர மிகுதி வேறெந்த ஊடகத்துறையும் தலையெடுக்க முடியாமல்த்தானிருக்கிறது. அல்லது இந்திய போட்டியாளர்களைபின் தொடர்பவையாகத் தான் இருக்கின்றன. வானொலிகள் மட்டுப்படுத்தப்பட்டளவு தூரவீச்சு அலைவரிசையைப்பாவிப்பதனால் அவை தப்பித்தனபோலும். ஆனாலும் சக்தி பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பிற்கான முக்கியபொறுப்பில் இருப்பவர் ஒரு இந்தியர். இது குறித்த ஒரு புகாரை யாரோ ஒருவர் சிலகாலத்தின் முன் பத்திரிகையில் எழுதியிருந்தார். தவிரவும் பல பண்பலை வானொலிகளைமுதலில் கேட்கும் ஒருவர் இது இந்திய ஒலிபரப்பா அல்லது இலங்கை ஒலிபரப்பா என்றுநிச்சயம் குழப்பமடைவார்.லிபரப்பாளர்கள்-குறிப்பாகப் பெண்கள் - இந்திய பாணியிலான உச்சரிப்பையே கையாள்வார்கள். ஒரு வானொலி நண்பர் சொன்னார்இது தவிர்க்க முடியாதது. அப்படி பாவித்தால்தான் நிலை பெற முடியும் என.
நமது அமைவிடம் மற்றும் வேறு பல வரலாற்றுகாரணங்களின் நிமித்தம் இந்த விபத்து நேர்ந்து விட்டது. ஆயினும் நாம் ஓரளவுசுயாதீனத்திற்கு முயற்சிக்க வேண்டாமா என்ற கேள்வியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பலரிற்குவசந்தம் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி இருப்பதே தெரியாது(அதைப் பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை என்பது வேறு விசயம்). பல நண்பர்கள் சொல்வார்கள்- வீடுகளில் இலங்கை ஊடகங்களின் செய்தியறிக்கையைப் பார்க்க போராடவேண்டியிருப்பதாக. அனேக செய்தியறிக்கை நேரங்கள் மாலை ஏழுமணியை அண்மித்திருப்பதால்தமது வயோதிப தந்தைமார்-குறிப்பாக திராவிட பாரம்பரியத்தில் ஊறியவர்கள்- இந்திய அலைவரிசைகளில்தான்செய்தி பார்க்க வேண்டும் என அடம்பிடிப்பதாக. திராவிட இயக்கங்களின் வருகை கூடஇப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை குறித்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய செய்திஇலங்கை ஊடகம் ஒன்றில் சொல்லப்பட்டுக்கொண்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பொழுதில் தனது வீட்டினர்இந்திய தொலைக்காட்சியொன்றில் கனிமொழிக்கு பிணைகிடைக்குமா இல்லையா என்றசெய்தியையோ நாமக்கல்லில் கோழிகளிற்குப் பரவும் தொற்றுநோய் பற்றியோ வைத்தவிழி வாங்காமல் பார்த்துகொண்டிருப்பதாக ஒரு நண்பர் அண்மையில் புலம்பினார்.
இதனால்தான் இங்கு ஈழத்துகாந்திஈழத்துசௌந்தரராஜன்ஈழத்துசிவாஜி,பெண்சிவாஜி எல்லாம் உருவாக முடிந்தது.
இலக்கியத்தின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலமானஎதிரியை எதிர் கொள்ள முடியாமல் அவை எப்போதோ சரணடைந்து விட்டன. ஆரம்பத்திலேயேகுறிப்பிட்டது போல ஈழக்கடைகளில் இலங்கை புத்தகங்கள் வாங்குவது அல்லது நல்ல புத்தகங்கள்(இதற்குள் இந்திய புத்தகங்களும் அடக்கம்) ஆச்சரியமான ஒரு நிகழ்வே. இலங்கையில்சில சஞ்சிகைகள் வரத்தான் செய்கின்றன. இன்றை திகதியில் இலங்கையில் வரும் அனேக சஞ்சிகைகளிற்கு இருக்கும் ஒரே பெருமை- தொடர்ச்சியான வருகை என்ற ஒன்று மட்டுமே. அதைத் தவிர்த்தால்பெரும்பாலானவற்றில் எதுவுமில்லை. ஊரில் இருக்கும் சங்கக்கடைகளை உங்களிற்குத் தெரிந்திருக்கும். நிவாரணநேரத்தில் ஊர் விதானையின் கையெழுத்துடன் அந்த அந்த ஊர் சங்கக்கடைகளிற்கு மட்டுமே போக வேண்டும். அங்கு மட்டுமே சாமான் கிடைக்கும். எனக்குஇந்த சஞ்சிகைகளை பார்க்க அந்த நினைப்புத்தான் வரும். பலதும் கிராம சஞ்சிகைகளாக மட்டுமேவருகின்றன. வந்ததும் பணச்சடங்கு நிகழ்வு போல ஊரிலுள்ளவர்களைக் கூட்டி வெளியீட்டு விழாநடத்தி அந்த பணத்தைப் பெற்று கொள்கிறார்கள். பலரும் கடைகளிற்குக் கொடுத்துத் தான் பணம் சேர்க்க வேண்டும்என்ற நிலையில் இல்லை.
இந்த வகையான போக்கிருக்கையில் புத்தகக் கடை உரிமையாளர்களையும்குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் வாசகர்கள் அல்ல. வியாபாரிகள் மட்டுமே. ஈழத்திற் பூக்கும் அத்தியை அவர்கள்கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.
யாழ்ப்பாணத்தில் செழிப்பான ஒரு புத்தக பண்பாடு இருந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு சிறப்பான நிலை முன்னொரு காலத்தில்‘ இருந்திருக்கிறது.ஈழகேசரி பண்ணை பல ஈழத்துப்படைப்பாளிகளை அறிமுகம் செய்திருந்தது. பின்னர் முன்னர் போலஅல்லாவிட்டாலும்  வீரகேசரிமீரா, அலைதேசிய கலை இலக்கியப் பேரவைபுலிகளின் வெளியீடுகள் என நல்ல பல நூல்கள் வந்திருந்தன. அது ஒரு செழிப்பானகாலமாக இருந்தது.
பின்னர் உதிரியாக ஓரிரு வெளியீட்டு முயற்சிகள்இருந்தன. ஆனால் அவை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்பொழுதும் சில இருக்கின்றன.அவற்றின் வெளியீடுகளின் தரம் குறித்த விமர்சனங்களுமிருந்து கொண்டிருக்கிறது.இப்பொழுது இந்தியாவில் இயங்கும் வடலிதான் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகிறது.
இந்தத் தேக்கத்தை இல்லாமல் செய்து ஒரு முன்னோக்கிய உந்துதலிற்கானசிறு எத்தனங்களைச் செய்யப் பல காலத்திலும் பலரும் முயன்றிருக்கிறார்கள். யாருக்கும் எதிர்பார்த்தபலன் கிட்டியிருக்கவில்லை. இப்படித்தான் அண்மையில் இதே போன்றதொரு எத்தனத்திற்கானகலந்துரையாடல் யாழ் சிகரம் ஊடக கற்கை நிலையத்தில் ற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன்.உள்ளே நுழையகவிஞர் சோ.பத்மநாதன் விலங்குப் பண்ணை நாவல் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். பிறகு ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்வில்லங்கமான அரசியல் கதைக்க தொடங்கினா. நான் எழுந்து வெளியில் வந்து விட்டேன். ரு வைத்தியரும் உரையாற்றினார். சற்றுத்  தாமதித்து நுழையடான் ரிவி குகநாதன் ஏதோ நகைச்சுவையாக தனது கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். முன் வரிசையிலிருந்த பேராசிரியர்ரட்ணஜீவன் கூல் கதிரை உடைந்து கீழே விழுந்தார். நான் இரண்டு தேநீர் பருகினேன்.இதனைத் தவிர்த்தால் அங்கு அன்று எதுவும் கதைக்கப்படவில்லை. கலந்துரையாடப்படவுமில்லை.இப்படியாக யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்காமல்அல்அதற்காக இன்னும் கலந்துரையாடப்படாமலும் இருக்கிறது. 


நன்றி - யோ.கர்ணன் 

வெள்ளி, நவம்பர் 25

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் பாலை திரைப்படம் வெளியீடு!

மறுமலர்ச்சி

நன்றி - http://marumalarchi10.blogspot.com

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது.



இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.


இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.





தேசிய விருது பெற்ற "போஸ்ட் மேன்" குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.



தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.



கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.




இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.



சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 6:05 AM

நன்றி-
http://marumalarchi10.blogspot.com

பாலை படம் பற்றிய மேலதிக இணைப்புக்கள்
1.


பாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்

by கரி காலன் on Friday, 25 November 2011 at 23:58
http://www.facebook.com/note.php?note_id=2369451433470

அன்புள்ள செந்தமிழனுக்கு பெருமையுடன் ஒரு முதல் வரிசை ரசிகனின் பார்வையும் பாராட்டுகளும்,

முதலில் இது ஒரு வெற்றிப் படம் என்றுத் தெரிந்து கொண்டேன், வந்தேறிகளை நேரடியாக எதிர்க்கும் படம் என்பதால் மட்டுமல்ல, இப்படி ஒரு படைப்பு நம் மொழியில் உருவானதே ஒரு வெற்றிதான்.

மிக மிகக் கடினமான சூழலில் இந்தப் பதிவை நான் எழுதுகிறேன், ஏனெனில் அநேகமாக டாப் டென்னில் வரும் அனைத்து படங்களும் பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமான படம் என்று இருந்தாலும் , கதைக்குள் நம்மை கரையவைக்கும் மந்திரப் படைப்புகள் மிகச்சில மட்டுமே உள்ளன , அந்தமிகச் சில படைப்புகளில் ஒரு சிறந்த படைப்பு எனச் சொல்லும் திருப்திக்காக இந்த பார்வையை எழுதும் அதே வேளையில், இந்தப் படம் வணிகரீதியாக சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கல்களை நினைக்கையில் தாங்க முடியா வலி ஒன்றும் கூடவே இருக்கிறது...

வலி ஏன்? இன்றைய சினிமாச் சந்தை -  கார்ப்பரேட் முதலாளிகளிடமும், அரசியல்வியாதிகளிடமும், மசாலா ரசனைகளிலும் சிக்கியதால் , இன்று புதியவர்கள், புரட்சியாளர்கள், திரைப்படங்களை நல்லதொரு ஊடகமாக்க நினைக்கும் கலைஞர்கள் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்று தங்கள் கட்டுரையை முகநூலில் இன்று வாசிக்கும் போதே நன்று புரிந்துகொண்டேன், தங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட 1911  படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பை பற்றியும் எழுதியிருந்தீர்கள், அந்தப் படம் கூட (வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைச் சொல்லாமல் ஒரு வரலாற்றுப் புரட்சியைத் தான் சித்தரிக்கிறது) இங்கு பெரும் தோல்வி அடைந்தாலும், அவர்கள் ஊரில் நல்ல மதிப்பையும் வெற்றியைப் பெற்றதன் காரணம் அவர்களுக்கு தெரிந்திருந்த அந்த வரலாறு. இந்த படம் பற்றிய அறிவு நமக்கு சிறிதேனுமிருந்தால் மட்டுமே கதைக்குள் நாமும் அமர முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சில வணிகரீதியான் (economical  advantage) சாதகங்கள் தங்களுக்கு இருப்பின் நீங்கள் இமாலய வெற்றியை வெகுஜனங்களிடம் இந்தப் படத்தின் மூலம் எட்டியிருப்பீர்கள், இப்பொழுதும் உங்கள் வெற்றி அத்தகையது தான் - ஏனெனில்,எத்தனையோ மாபெரும் கலைஞர்கள் இருக்கும் இந்தத் துறையில் இந்த அளவுக்கு தனது முதல் படைப்பில் எடுத்திருக்கும் கடுமுயற்சி, எம்மைப் போன்ற எளிய பார்வையாளனுக்கும் புலப்படுவதில் நீங்கள் பெரிய சிகரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.


எங்கே இந்தப் படம் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கத் தவறிவிடுமோ என்கிற பயமும் எனக்கு இருக்கிறது, ஒரு பொழுதுபோக்கில் கூட முழு ஈடுபாடற்ற சமுதாயம் (சினிமாவிற்கு கூட மிகத் தாமதமாக வந்துவிட்டு படத்தினை புரிந்து கொள்ள முடியாது கம்மென்ட் அடிப்பது) தங்கள் படங்களை பார்க்கும் கண்ணோட்டம் சரியாக இருக்கவேண்டும் என்று வேறு பயம் தருகிறது, இதற்கு நான் மிகவும் ரசித்த "வாகை சூட வா" படத்தின் தோல்வியும் ஒரு மண்ணுக்கும் உதவாத சில சூப்பர் ஹீரோக்களின் வசூல் ரிப்போர்ட்டுகளும் தான் காரணம்.

தங்கள் படத்தை பார்த்த முதல் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் படத்தில் எனக்கு தோன்றிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,  இந்தக் கதைக்களத்திற்க்கான உங்கள் உழைப்பு மற்றும் தேர்வுக்கே மிகுந்த பாராட்டுகள், முட்புதர்கள், செம்மண் நிலம், கண்மாய் என வறண்டு போன வானம் பார்த்த பூமியின் வெப்பம், குளிரூட்டப் பட்டுள்ள அறையிலும் எனக்கு உஷ்ணத்துடன் இருந்தது.

தோள்களில் சுமந்துகொண்டு காமிரா அலைந்து திரிந்து எங்களுக்காக படமாக்கிய விதம் மிக அருமை, கண்மாயில் எதிர்த்தண்ணியில் பாயும் மீன்கள், தோல் உறிக்கப்படும் மாடு என்று எல்லா காட்சிகளையும் எந்த மிகைப் படுத்துதலில்லாமல் தந்தமைக்கு நன்றி. மேலும், வீரர்கள் எறியும் அம்புகளுடனும், வேல்களுடனும் பயணிக்கும் காமிரா கோணங்களும், கம்ப்யுட்டர் சித்து விளையாட்டுகளையும்  தவிர்த்தமைக்கு பெரிய கும்பிடு. எளியோரின் போர் முறை எளிமையாகவே இருந்தது.

இசை, அந்த கால நினைவுகளை கொண்டுவரவில்லையே என்றாலும், நீங்கள்  அதையும் justify  பண்ணியதாகவே தோன்றுகிறது. இந்த கால கருவிகளைக்  கொண்டே அந்தக கால  மனிதர்களின் உணர்வுகளை கொண்டு வந்துவிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெறும் தாரை தப்பட்டை சப்தங்கள் பண்டைய காலம் போன்றே இருந்தால், கண்டிப்பாக நாம் இந்த படத்தின் சீரியஸ் கட்டங்களை உணரமுடிவது கொஞ்சம் சிரமம் தான்.

படத்தில் பாலைமறவனின் வசனங்கள் மற்றும் அவர் தலைவனுக்கு சொல்லும் உபதேசங்கள், மற்றும் பாலை பற்றி அவர் சொல்லும் கதையும் விதமும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டியது, ஷம்மு மற்றும் அவள் தோழிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம், அடிமைகள் இல்லாத இனமாக நம்மை காட்டியிருப்பது எல்லாம் இன்றைய தமிழர்கள் (குறிப்பாக சாதி, வர்க்க அரசியிலால் பாழ்படுத்தப்படும் இளைஞர்கள்) பார்க்கவேண்டியது.


எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கம், புலி பற்றி முல்லைக்கொடித் தலைவர் தன வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதம் தான், இந்தப் படம் பேசும் அரசியலாக நான் உணர்கிறேன், "சிங்கம் வலிமையானது தான், ஆனால் பசியும் , வலியும் தாங்காது, ஆனால் புலி பசியையும் தாங்கும், பதுங்கியும் தாக்கும்"என்று சொல்லும்போது உணர்சிபெருக்கு கண்ணீரை உருமாறும் யதார்த்தம் " இருக்கிறது, "நீங்கள் யாரும் தலைவனின் கட்டளைக்கு காத்திருக்கத் தேவையில்லை தனித் தனியாக போராடுங்கள் " எனும் இடங்களில் உணர்ச்சிகள் கட்டுப்படவில்லை, இதை சாதுரியமாக திமிர் பிடித்த தணிக்கை நண்பர்களிடமிருந்து புரியா வண்ணம் கொணர்ந்த உமக்கு மேலும் ஒரு மலர்மாலை.

மேலே சொன்ன இந்த அரசியலைப் பேசத் தான் நாம் 2000 வருடங்கள் முன்னோக்கிப் போகவேண்டியுள்ளது."திருப்பி அடிக்கனும்னு" (7aam அறிவு ) சொல்லும் உணர்வு கூட இன்று கமர்சியல் ஃபார்முலாக்கலாக மட்டுமே வெகுஜனங்களிடம் மிஞ்சுகிறது, அந்தப் படங்களில் சென்னை சூப்பர் கிங்க்சுக்காக கை தட்டும் ரசிகனாகவே என்னை நான் உணர்ந்தேன்.

உடன்போக்கு, ஆநிரைகவர்தல், வழிப்பறி, மீன்பிடித்தல், பறை, காதல், வானசாத்திரம், கள்வெறி, மயக்கம் என இலக்கிய அடித்தளங்கள் இப்படத்தில் வலுவாக இருந்தது, என்ன வசன உச்சரிப்பில் ஷம்மு நிறைய தடுமாறியிருப்பதாய் தோன்றியது (ஒருவேளை இது என் தவறான கணிப்பாகவும் இருக்கலாம்). மீண்டும் ஒருமுறை இந்தப் படத்திற்கு உழைத்த எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், வாழ்ந்து காட்டிய நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். பாடல்களில் பாலையின் தீம் சாங்கும், முதல் பாடலும் நன்றாக இருக்கிறது .

திரு.செந்தமிழன் அவர்களே!!
உங்களுக்கு நிற்க ஒரு அடி மண் மட்டும் தானா, இந்த மாதொரு படைப்பின் மூலம் எங்கள் மனதில் நின்றுவிட்டீர்கள்.....இந்தப்படம் கண்டிப்பாய் வெற்றிபெறும், எங்களுக்கு மேலும் பல நல்ல படைப்புகளை தருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

எமது முகநூல், ப்ளாகர் நண்பர்களே!!  நல்ல படைப்பை ஊடகங்கள் வணிகரீதியாக ஏற்காவிடினும் , நமது முயற்சிகூட பெருமளவு கைகொடுக்கும் , தயவு செய்து இந்தப்படம் பார்த்து தேவையற்ற மசாலா, தழுவல் படங்களைப் பார்த்த பாவங்களை கழுவுங்கள்.படத்தை பாருங்கள் திரையில்.......

Screens  in  Tamilnadu  



காக்கா கடி:

*கொஞ்சம் பாலை பற்றிய அறிவுடன் படம் பார்ப்பது நல்லது, ஒன்னும் தெரியவில்லை என்றால் எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகங்களை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Sangam_landscape  உதவக்கூடும்

*எனக்கு இந்தப் படம் மிக வேகமாக சென்றுகொண்டிருப்பதாய் தோன்றியது, பலர் இதை ரொம்ப ஊர்ந்து செல்லும் கதை என்று நொந்து கொள்ளும் லாஜிக் எனக்குப் புரியவில்லை, (what else you need எனி kuthu song or santhaanam??)

* எங்கேயாவது சில இடங்களில் எனது பார்வை மிகைபடுத்தியிருந்தால், என்னை மன்னிக்கவும்  .. எளிமையாய் சொல்லும் கலை மிகக் கடினம் என்று புரிந்துகொண்டேன்.



சனி, நவம்பர் 12

போகிற போக்கில் - எனக்குப் பிடித்தவற்றில் இருந்து....





எஸ். ராமகிருஸ்ணன் நேர்காணல்

இந்த நேர்காணலை காணொளியாக ஏற்கனவே பார்த்து கேட்டு இருக்கிறேன். திரும்பவும் திரும்பவும் கேட்கத் தூண்டுகிறது. அதில் வாசிப்புப்பற்றி கூறும்போது மிக எளிமையாக ஒரு உதாரணம் பின்வருமாறு சொல்வார்.

"எப்படி நம்மளோட உருவத்தைத் திருத்திக்கிறதுக்கு ஒரு கண்ணாடி அவசியப்படுதோ அதேபோல மனதைத் திருத்திக்கிறதுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது."


ஆனால் இலக்கிய உலகில் "நான் வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்" என்று கூறும் பலரின் மனம் திருந்தியிருப்பதாகத் தெரியவில்லை.
இன்று எங்களைச் சுற்றி நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் பார்க்கும்போது...படித்தவர்கள்...எல்லாம் தெரிந்தவர்கள்... நாகரிக மனிதர்களைக் கண்டால்...வெருண்டோட வேண்டியிருக்கிறது.

மாறாக, படிப்பறிவில்லாத ஒரு பாமரனனோடு மிகச் சந்தோசமாக உரையாட முடிகிறது. இன்னமும் அவன் மனிதனாகவே இருக்கிறான். இந்த வேறுபாடு ஏன் என்பதுதான் இன்னமும் புரியவேயில்லை. அப்படியானால் படிக்காமல் உலகம் தெரியாமல் கச்சை கட்டுக்கொண்டு இன்னமும் ஆதிவாசிகளாகவே இருந்திருக்கலாம்போல...........

எஸ். ராமகிருஸ்ணனின் உரையாடலை முழுவதும் காண்பதற்குhttp://www.sramakrishnan.com/?page_id=717